Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கத் தயாராக வராமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிருப்தி
இலங்கை

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கத் தயாராக வராமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிருப்தி

ThanaBy ThanaMarch 12, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு கூறி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர்.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் நேற்றுமுன்தினம் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடந்தகாலக் கூட்டங்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. குறிப்பாக இலங்கை சுங்கத்தின் கணினிக் கட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னர், இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பதிவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தபோதும், அவ்வாறான அறிக்கையொதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். எனினும், அறிக்கையைத் தாம் வழங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறியபோதும், அவ்வாறான அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையின் பிரதி குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்த கணக்காய்வாளர் நாயகம் அது குறித்துத் தான் திருப்தியடையவில்லையென குழுவில் தெிரவித்தார். அதிலுள்ள விடயங்கள் குறித்து குழு நீண்ட நேரம் கேள்விகளைக் கேட்டபோதும், அதிகாரிகளால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியவில்லை. பழைய தகவல்கள் தம்மிடம் இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, விசாரணைகளை இடைநடுவில் நிறுத்தியதுடன், பிறிதொரு தினத்தில் மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானித்தது. குறித்த தினத்தில் முழுமையான தயார்ப்படுத்தல்களுடன் வருமாறும் குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் (மேஜர் ஜெனரல்) (ஓய்வுபெற்ற) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தன சூரியாராச்சி, சட்டத்தரணி சாகரிகா அதாவுடா, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரட்ண, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, தினிந்து சமன் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

எம். ஜயலத் பெரேரா,

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்),

இலங்கை பாராளுமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026
    Editors Picks

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.