Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்
இலங்கை

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்

ThanaBy ThanaMarch 18, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள்  திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் ஐ ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல்

• குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்

• ஐஐ ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்

• 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.

• புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026
    Editors Picks

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.