Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் 71 வயது முதியவரின் அஸ்வெசும பணம் அபகரிப்பு: பிரதேச செயலக அதிகாரியின் உறவினர் பெயரில் அரங்கேறிய மாபெரும் மோசடி!

September 2, 2026

பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

September 1, 2026

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு
இலங்கை

அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

ThanaBy ThanaApril 11, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பான விடயங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்பவற்றை ஒன்றிணைத்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆராயவும் இதன் போது முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் எஸ். ராசமாணிக்கம்,புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுயோட்சைக் குழு 17 சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அர்ச்சுன ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், காதர் மஸ்தான் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-04-10

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொகவந்தலாவையில் 71 வயது முதியவரின் அஸ்வெசும பணம் அபகரிப்பு: பிரதேச செயலக அதிகாரியின் உறவினர் பெயரில் அரங்கேறிய மாபெரும் மோசடி!

    September 2, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் 71 வயது முதியவரின் அஸ்வெசும பணம் அபகரிப்பு: பிரதேச செயலக அதிகாரியின் உறவினர் பெயரில் அரங்கேறிய மாபெரும் மோசடி!

    September 2, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    பொகவந்தலாவையில் 71 வயது முதியவரின் அஸ்வெசும பணம் அபகரிப்பு: பிரதேச செயலக அதிகாரியின் உறவினர் பெயரில் அரங்கேறிய மாபெரும் மோசடி!

    September 2, 2026

    பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.!

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.