(க.கிஷாந்தன்)
நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடியுடன் கடும் மழை பெய்தது. இதன்போது மின்னல் தாக்கியதில் வேனொன்றும், வீடொன்றும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், வீட்டில் இருந்த நபரொருவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மின்னல் தாக்கத்தையடுத்து நேற்று மாலை நோர்வூட்டில் பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களிலும் சீரற்ற வானிலை நிலவும் என்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

