டிட்வா (Ditwa) பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மறுசீரமைப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்த நிதி உதவி முக்கிய பங்காற்றும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
