பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் ரூபா நன்கொடை
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
அதன்படி,
South Asia Gateway Terminals (SAGT) – 100 மில்லியன் ரூபாவும்
Nations Trust Bank – 100 மில்லியன் ரூபாவும்
Lanka Marine Services Pvt Ltd – 50 மில்லியன் ரூபாவும்
Jaykay Marketing Services Pvt Ltd 50 மில்லியன் ரூபாவும்
Union Assurance 50 மில்லியன் ரூபாவும்
Elephant House 50 மில்லியன் ரூபாவும் ஆகிய நிறுவனங்களினால் வழங்கப்பட்டன.
அதற்கான காசோலைகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்த டி. குணதிலக்க மற்றும் South Asia Gateway Terminals இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Steen Knudsen ஆகியோர் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings PLC) இன் பிரதித் தலைவர்/குழும நிதி பணிப்பாளர் கிஹான் குரே மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026. 01. 07
