Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை
Breaking

கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை

ThanaBy ThanaMarch 9, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை – விசாரணைக் குழு தகவல்!

டிக்கோயா: நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவரின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என மருத்துவமனை அத்தியட்சகர் மொஹமட் பாரூக் மொஹமட் பஷீல் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்த யுவதி ஒருவரின் உடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவர் உடலத்திற்கு அவமரியாதை இழைத்ததாகப் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய மருத்துவமனை நிர்வாகத்தினால் ஒரு குழுவும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவ அத்தியட்சகர்:

“சி.சி.ரி.வி (CCTV) காட்சிகள் மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் இன்று மாலை எமக்குக் கிடைக்கவுள்ளன,” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று (09) நடத்தப்படவிருந்த போராட்டங்களுக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விசாரணை அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.