லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 3,990 ரூபா)
5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 1,602 ரூபா)
2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: 56 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை: 750 ரூபா)
