Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

October 17, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெண் வலுவூட்டலுக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தலைமைத்துவ விருது
இலங்கை

பெண் வலுவூட்டலுக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தலைமைத்துவ விருது

ThanaBy ThanaMarch 11, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு.

 பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச்
சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.
பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு “ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது” (Shireen Lateef Women’s Leadership Award) வழங்கி வைக்கப்பட்டது.
இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026
    Editors Picks

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.