நுவரெலியா மாவட்டத்தில் இன்று நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுகலை கீழ்பிறிவு தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை நுவரெலியா பகுதியில் கடும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதன்போது, மாலை 4 மணி அளவில் லபுகலை கீழ்பிறிவு தோட்டப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்றின் மீது பலத்த இடி மின்னல் தாக்கியுள்ளது. இதனால் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.
மரம் முறிந்து விழுந்த போது அதன் கிளைகளுக்குள் சிக்கி, அந்த இடத்தில் இருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக செயற்பட்ட தோட்ட மக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
