தமிழக சட்டமன்றத் தேர்தல்- விஜய் இல்லத்தில் போலீஸ் குவிப்பு – நீலாங்கரையில் பலத்த பாதுகாப்பு!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாதுகாப்பு உச்சகட்டமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளிகி வரும் நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்தும் முன்னனிலையில் இருந்து வருகின்றது. தற்போது வரை தவெக கட்சிக்குச் சாதகமான முடிவுகளைக் காட்டி வருவதால், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் முடிவுகள் வெளியாகும் போது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தலைவரைச் சந்திக்கவும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நீலாங்கரை இல்லத்தில் பெருமளவில் குவியக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
