கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பல்லேகம ஹேமரத்ன தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வூட்லர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும், தொழிலதிபர் எனக் கூறப்படும் ஒருவரும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அச்சிறுமி ராகம சிறார் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற.
