Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

ThanaBy ThanaMay 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ரணவிரு (போர் வீரர்கள்) நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று (25) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு நினைவுத் தூபி வளாகத்தில், அடுத்த நாள் நடைபெறவிருந்த பிரதான விழாவிற்கான ஒத்திகை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது அங்கு சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸாரின் கடமைகளைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு விமல் வீரவன்ச சமூகமளித்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சற்று முன்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 19ஆம் திகதி பிரதான ரணவிரு நினைவு தின விழா திட்டமிட்டபடி நடைபெற்றது.

அதற்கு முதல் நாளான 18ஆம் திகதியன்று, விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் இந்த நினைவுத் தூபி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் முண்டியடிப்பு ஏற்பட்டது. பொலிஸாரின் தடைகளை மீறி ஓட முயன்ற விமல் வீரவன்ச, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குப்புற விழுந்து குட்டிக்கரணம் அடித்தார் என்பதும், இது தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026
    Editors Picks

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.