Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலையில் பரபரப்பு: சட்டவிரோத கம்பிப் பொறிகள் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
Breaking

கொட்டகலையில் பரபரப்பு: சட்டவிரோத கம்பிப் பொறிகள் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

ThanaBy ThanaJune 16, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காணியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறிகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் தாக்கப்பட்ட சம்பவம் கொட்டகலை பகுதியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை, கொமர்சல் (Commercial) நேத்ரா பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பகுதியில் நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவர் தனது விவசாயக் காணியில் வனவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் கம்பிப் பொறிகளை அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தொழில் நிமித்தமாகக் கொழும்பில் இருந்த வேளையில், அவரது விவசாயக் காணியின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் அவரது வளர்ப்பு நாய் சிக்கியுள்ளது. இதனையடுத்து, விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நபரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர், அப்பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்தச் சட்டவிரோதப் பொறிகளை அகற்றுமாறு கோரியுள்ளார்.

எனினும், அதற்குப் பதிலளித்த அந்த நபர்,

“கம்பி வலைகள் எனது காணிக்குள் அமைக்கப்பட்டுள்ளன; இதில் எவரும் தலையிடத் தேவையில்லை”

எனக் கூறியதுடன், ஊடகவியலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 10 ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் இது குறித்து ஊடகவியலாளர் தகவல் வழங்கியுள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடித் தேடுதலில், பல சட்டவிரோதக் கம்பிப் பொறிகளை மீட்டதுடன், சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

இந்நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கியமைக்குப் பழிவாங்கும் நோக்கில், மல்லிகைப்பூ சந்திப் பகுதியில் வைத்து குறித்த நபர் தன்னைத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இயற்கைச் சூழலையும் அப்பாவி உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு செயற்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் தாமதமாகவோ அல்லது அலட்சியமாகவோ மேற்கொள்ளப்படுமானால், எதிர்காலத்தில் சமூக நலனுக்காகவும், சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்கள் அச்சமடையக்கூடிய சூழல் உருவாகும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் மற்றும் ஊடக அமைப்புகள் பலமாக வலியுறுத்தியுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.