Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு

June 20, 2026

நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்.

June 20, 2026

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

June 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு
Breaking

பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு

ThanaBy ThanaJune 20, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு

தித்வா புனருத்தாரணம் தொடர்பில் நீங்கள், இலங்கைக்கு பாதுகாப்பான நிலத்தை தெரிவு செய்வது எப்படி என்ற தொழில் நுட்ப உதவிகள் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான காணி இல்லை என நம் தித்வா மலையக அகதிகளை இன்னும் கூடாரங்களில் இந்த அரசு வைத்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, மாவட்டங்க‌ளி‌ல் இந்நிலை தொடர்கிறது.

ஆகவே உங்கள் உதவி வழங்கப்படும் வேளைகளில் மலையக மக்களுக்கு அது பயன்படுகிறதா என்பதை கண்காணியுங்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஆஸ்திரேலிய தூதர் மெத்யூ டக்வொர்த்திடம் எடுத்து கூறினார்.

ஆஸ்திரேலியா ஹவுஸில் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தூதுக்குழுவினருக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளர், ஜமமு சிரேஷ்ட உபதலைவர் சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் பாரத் அருள்சாமி, மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர் மெத்திவ் டக்வர்த், துணை தூதர் ரூத் பைர்ட், அரசியல் அதிகாரி மெத்யூ லார்ட்

கல‌ந்து கொண்டனர்.

இது பற்றிய கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறினார் உள்ளதாவது;

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தை (NBRO) பலப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவிற்காக, கூட்டணி தூதுக்குழுவினர் தமது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

தித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில் NBRO நிறுவனத்தின் அனுமதி தாமதம் பிரதான தடையாக இருகிறது.

டிஜிட்டல் வரைபடமாக்கல் (Digital Mapping) மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.

இந்த பங்களிப்பு எமது மக்களுக்கு உதவி அவர்களது மீள்குடியேற்றத்துக்கு உதவுகிறதா என கண்காணியுங்கள் என மனோ கணேசன் தலைமையிலான தூத்துகுழு,

ஆஸ்திரேலிய தரப்பை கேட்டு கொண்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்.

    June 20, 2026

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    June 19, 2026

    மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கலந்தாய்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுப்பு

    June 19, 2026

    நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

    June 19, 2026
    Editors Picks

    பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு

    June 20, 2026

    நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்.

    June 20, 2026

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    June 19, 2026

    மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கலந்தாய்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுப்பு

    June 19, 2026

    பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு

    June 20, 2026

    நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்.

    June 20, 2026

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.