இலங்கை–பிரித்தானிய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு
கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினார்.
துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களுடன் இணைந்து, மலையக சமூகத்தின் முன்னுரிமைகள், டிட்வா புயல் தொடர்பான தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அவர்களின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
ஜீவன் தொண்டமான் பா.உ
