ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையின் குயில்வத்தை பகுதியில் பாரியளவில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஹட்டனில் இருந்து கொழும்பு, கண்டி மற்றும் கினிகத்தேனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அசௌகரியமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஹட்டன் வலயப் பிரதேச காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், சாலையில் சரிந்து விழுந்த மண் திட்டுகளை அகற்றும் அவசரகாலப் பணிகளை இன்று (15 ஆம் திகதி) காலை வேளையில் அவர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
- மஸ்கெலியா செய்தியாளர், செ. தி. பெருமாள்
