கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் மூலம் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவினூடாக, மாகாண சபை நிதியத்திலிருந்து ரூ. 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் மற்றும் அப்பகுதி தோட்டப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

