பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல மூத்த சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாவலிலுள்ள அவரது இல்லத்தில் காலமானபோது அவருக்கு வயது 82 ஆகும். இலங்கை இசை உலகில் தனது தனித்துவமான குரல்வளத்தினாலும் சமூகச் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் பாடல்களினாலும் பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
