கொழும்பு, பொரளை – டி.எஸ். சேனநாயக்க சந்தி மற்றும் மொடல் பாம் (Model Farm) வீதி சந்தி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் நீர்க்குழாய் ஒன்று வெடித்துள்ளதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நீர்க்குழாய் வெடித்ததைத் தொடர்ந்து வீதியில் நீர் நிரம்பியுள்ளமையால் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இவ் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
