மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை எதிர்பார்க்கப்படுகிறது.ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்கு பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இன்று (28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.
இடிமின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
