Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

September 21, 2026

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

September 21, 2026

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சமூக நலனுக்கான கருவியாக மாற்றும் நோக்கில்  ‘ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்’ அமைப்பு நடாத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி!
இலங்கை

சமூக நலனுக்கான கருவியாக மாற்றும் நோக்கில்  ‘ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்’ அமைப்பு நடாத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி!

ThanaBy ThanaAugust 27, 2026Updated:September 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

விளையாட்டைச் சமூக நலனுக்கான கருவியாக மாற்றும் நோக்கில்  ‘ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்’ அமைப்பு நடாத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி!

விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சமூக நலனுக்கான ஒரு வலிமையான கருவியாக மாற்றும் உன்னத நோக்கில் ‘Helping Hands’ அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேவையுடைய குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில் இத்தகைய சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ‘Helping Hands’ அமைப்பு திட்டமிட்டுள்ளது. இச்சமூக நலப் பணியில் பங்களிக்க விரும்பும் நல்ல உள்ளங்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய( 27) தினம் கொழும்பு சீவலி பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மிகுந்த எழுச்சியுடன் 16 அணிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தின.

போட்டியின் நிறைவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் ஆகியோரும் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இப்போட்டியில் பங்குபற்றிய 16 அணிகளையும் கவுரவிக்கும் வகையில் விசேட சின்னங்களும் வழங்கப்பட்டன.

இத்தோடு, காலமான இரு விளையாட்டு வீரர்களை இந்நேரத்தில் நினைவு கூர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு கௌரவ நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விழாவை எவ்வித குறைவுமின்றி மிக நேர்த்தியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த திரு. விக்னேஷ்வரன் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையை இதன்போது பலரும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026
    Editors Picks

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.