சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் குறைக்க உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், இம்முறை சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்தச் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
