பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அபிவிருத்தித் திட்டம் –ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட தோட்ட அமைப்பாளர் என்ற முறையில், பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக அபிவிருத்தி நிதியை வழங்கியமைக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தின் நலன் மற்றும் சமய வளர்ச்சிக்காக கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் வழங்கி வரும் மதிப்புமிக்க ஆதரவையும் பங்களிப்பையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம்.
எமது சமூகத்தின் சமய மற்றும் கலாசார வளர்ச்சிக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் இத்தகைய ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஹரிஷ் ரவீந்திரன்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நுவரெலியா மாவட்ட தோட்ட உட்கட்டமைப்பாளர்

