Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

September 10, 2026

அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

September 10, 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

September 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லுபடியற்றது உயர் நீதிமன்றம்
Breaking

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லுபடியற்றது உயர் நீதிமன்றம்

ThanaBy ThanaSeptember 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஹோமகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

 முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது என்பதால், அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026

    ஏகலயில் மற்றுமொரு மெட்ரோ டிப்போ செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது

    September 10, 2026

    பண்டாரவளை முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது

    September 10, 2026
    Editors Picks

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026

    ஏகலயில் மற்றுமொரு மெட்ரோ டிப்போ செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.