சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழலைக் கருத்திற் கொண்டு, அங்கு வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகக் காரியாலயம் விசேட பாதுகாப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பொதுமக்கள் தமது கைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கைச் செய்தி (National Warning Alert) கிடைக்கப் பெற்றால், உடனடியாகத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசரத் தொடர்பு எண்கள்:
மக்கா மற்றும் மதீனா பகுதிகள்: 911
ஏனைய பிராந்தியங்கள்: 998
இலங்கைத் துணைத் தூதரக அவசர எண்: 056 098 6671
அவசர நிலைகளின் போது பொதுமக்கள் இந்த எண்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
