தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் சந்தேகநபரின் தரப்புச் சட்டத்தரணிகளின் வாதங்களை அவதானித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
