Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!
இலங்கை

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

ThanaBy ThanaSeptember 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, விசேட நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.

​நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

​நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தலைமையில் செல்லவுள்ள இந்தக் குழுவில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர். இந்த விசேட தூதுக்குழுவினர் சவூதி அரேபிய மன்னரை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

​இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பிவைக்கப்படும் விசேட கடிதத்தை அந்தக் குழு சவூதி மன்னரிடம் கையளிக்கவுள்ளது.

​அதேநேரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள சிவராசா அனோஜனின் வழக்கிற்காக, இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

​இதன் அடிப்படையில், மேன்முறையீட்டிற்காக அவரது குடும்பத்தினரிடம் முன்னர் பெறப்பட்டிருந்த பணமும் மீளக் கையளிக்கப்படும் என்றும், அனோஜனை எவ்வாறayum விடுவிப்பதற்கான சகல வழிகளிலும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026
    Editors Picks

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.