2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாகப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் தமது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011-2 78 42 08 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளசாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!து.
