Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

September 28, 2026

செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

September 28, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

September 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்
இலங்கை

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

ThanaBy ThanaSeptember 28, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

இத்தாலி – பலெர்மோ:

இத்தாலியில் வசித்து வரும் றொபினற் நேசராஜா மற்றும் கொலஸ்ரிக்கா இணையரின் மகன் 8 வயதான *ரோய்ன்டன் றொபினற்*

இவர் 197 நாடுகளின் அமைவிடங்களை உலக வரைபடத்தில் துல்லியமாக அடையாளம் காட்டியதுடன், அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளை வைத்து, குறித்த நாட்டின் பெயர் மற்றும் அதன் தலைநகரத்தையும் சரியாகக் கூறி சாதனை படைத்துள்ளார்.

இச்சாதனைக்காக இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சோழன் உலக சாதனைப் புத்தகத்திலும் (Cholan Book of World Records), லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தி இன்டர்நேஷனல் அச்சீவ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிலும் (The International Achiever Book of World Records) மாணவர் ரோய்ன்டன் ரொபினட் நேசராஜாவின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த உலக சாதனை நிகழ்வு இத்தாலியின் பலெர்மோ நகர மேயர் ரொபெர்டோ லகாலா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொலெர்மோ நகரத்தின் துணைத் தலைவர் பினோ மேன்கியூசோ முன்னிலை வகித்தார்.

மாணவர் கல்வி கற்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா புராபாடோ மற்றும் பலெர்மோ நகரத்தின் தமிழ் மக்கள் பிரதிநிதி ரமணி தியாகராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.

உலக சாதனை படைத்த மாணவன் ரோய்ன்டன் ரொபினட் நேசராஜாவுக்கு பலெர்மோ நகர அரச நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன.

மேலும், உலக சாதனை நிறுவனங்களின் சார்பில் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் சாதனைப் பதிவுக் கோப்பு உள்ளிட்டவை வழங்கி மாணவன் கௌரவிக்கப்பட்டார்.

8 வயதிலேயே உலகின் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களைத் துல்லியமாக அடையாளம் காட்டி சாதனை படைத்த ரோஹின்டன் ரொபினட் நேசராஜாவை இத்தாலி நாட்டவர்களும் தமிழ் மக்களும் இணைந்து பாராட்டி வாழ்த்தினர்.

இந்தச் சாதனை, சிறுவனின் அபாரமான

நினைவாற்றல், புவியியல் அறிவு மற்றும் தொடர்ச்சியான பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    புத்தளத்தில் ரூ.850-க்கு போட்டோ பிரதி: சர்ச்சைக்குரிய கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

    September 26, 2026
    Editors Picks

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.