இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 475 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் 285 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
