Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026

போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Breaking

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ThanaBy ThanaOctober 7, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுவரெலியா, ஒக்டோபர் 07:

நுவரெலியா மாநகர சபையின் கீழ் தற்போது நிர்வகிக்கப்பட்டு வரும் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு வந்து நிர்வகிப்பதற்கு நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்வதற்கு தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனவும், எனினும் தற்போது மாநகர சபையின் கீழ் இயங்கி வரும் இப்பிரிவை அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

நீர்வளப் பிரிவு தொடர்ந்து மாநகர சபையின் கீழ் இயங்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கான சுமையை குறைக்க முடியும் எனவும், மாநகர சபைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுத்து சேவையை மேலும் மேம்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், மாநகர சபையின் நீர்வளப் பிரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்கள் அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டால், மாநகர சபைக்கு கிடைத்து வரும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும், இதனால் எதிர்காலத்தில் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்கள் உரிய முறையில் வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும், அவற்றை முறையாக கண்காணித்து வசூலிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாநகர சபை எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த நுவரெலியா மாநகர சபை முதல்வர், பொதுமக்களுக்கு தடையின்றி தரமானதும் சுகாதாரமானதுமான குடிநீரை வழங்குவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.

மேலும், நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்லும் நடவடிக்கையால் நுவரெலியா மாநகர சபைக்கு எவ்வித நிதி இழப்பும் ஏற்படாது எனவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமானதும் தரமானதுமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக நிலுவையில் உள்ள வரி வருமானங்களை முறையாக கண்காணித்து வசூலிப்பது தொடர்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Editors Picks

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.