நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
