மொறட்டுவை – சொய்சாபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
T-56 ரகத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிய துப்பாக்கிதாரிகள், வாகனம் பழுதடைந்ததால் பிலியந்தலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை அச்சுறுத்திக் கடத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.
அவ்வாறு கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சித்தமுல்ல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
