Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

October 22, 2026

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

October 22, 2026

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!
இலங்கை

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

ThanaBy ThanaOctober 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

 

– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்

 

உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி மதகுருமார்களுக்கும் உள்ளது. இவ்வாறான சூழலில், மதகுருமார்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராகச் சூனியப் பூஜைகள் இடம்பெறுவதாகக் ஊடகம் ஊடாக அறியப்படுவது, சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்ப்புகளை வெளிப்படுத்தும்போது அவை கொள்கை ரீதியாகவும், ஆக்கபூர்வமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். சூனியம் போன்ற விடயங்களைக் கூறி மூடநம்பிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டங்களை முன்னெடுப்பது, எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைவதுடன், சமூகத்தின் பின்னடைவுக்கும் வழிவகுக்கும்.

 

ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்பதும், அவற்றின் சாதகமான அம்சங்களை அங்கீகரிப்பதும், பாதகமான விடயங்களை சுட்டிக்காட்டுவதும் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் எமக்குள்ள பொறுப்பாகும். அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுமாயின், அவற்றை ஜனநாயக ரீதியாகவும் கொள்கை அடிப்படையிலும் எதிர்கொள்ள வேண்டும்.

 

இவ்வாறான செயற்பாடுகள் போராட்டத்தில் ஈடுபடும் மதகுருமார்களின் மதிப்பைக் குறைப்பதுடன், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உலகம் முன்னேறிச் செல்லும் நிலையில், இலங்கை இன்னும் மூடநம்பிக்கைகளில் தங்கியிருக்கும் நாடு என்ற தவறான பிம்பத்தைச் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்.

 

எனவே, இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கும், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான செயற்பாடுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும், எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் எனவும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

    October 22, 2026

    அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

    October 21, 2026

    மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

    October 21, 2026
    Editors Picks

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.