தங்களது தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த ஜூன் 29 ஆம் திகதியன்று, நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மீது ஹேக்கர் தாக்குதல் (Hacker Attack) நடத்தப்பட்டதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து, அது குறித்து உடனடியாக விரிவான விசாரணைகளும் தொழில்நுட்ப மதிப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாத்தியமான அச்சுறுத்தல்களில் இருந்து அமைப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டுத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
