விரிவுரையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஆரம்பம்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு… சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை மற்றும் போதுமான பௌதிக வசதிகள் இன்மையே இந்தப் போராட்டத்திற்கு முதன்மையான காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இணையாக நாளை (31) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினால் பேரணி ஒன்றையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரச பல்கலைக்கழக அமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
