ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்தமையால், அங்குள்ள முக்கிய ஆவணங்களும் மின்சாதனங்களும் சேதமடைந்துள்ளன.
ஹட்டன் பகுதியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாகவே அலுவலகத்திற்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் கணக்குப் பிரிவில் இருந்த பல்வேறு ஆவணக் கோப்புகளும் மின்சாதனங்களும் சேதமடைந்துள்ளதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
