அநுராதபுரம் – மதவாச்சி வீதியில், ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
