Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

November 10, 2026

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

November 10, 2026

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

November 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!
Breaking

தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

ThanaBy ThanaNovember 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

 

தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு நகரங்களில் அண்மைக்காலமாக கடை உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வாரம் மன்ராசி நகரில் அமைந்துள்ள கடையொன்றும், டயகம நகரில் அமைந்துள்ள மற்றுமொரு கடையும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் பெருமளவிலான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

 

அதேபோன்று, தலவாக்கலை நகரில் உள்ள கடையொன்றை உடைத்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரில் அமைந்துள்ள கடையொன்றிலும் கடந்த 06ஆம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

அத்துடன், இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் பொலிஸார் கோரியுள்ளனர்.

 

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, நகர்ப்புறங்களில் இரவு நேரப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    அநுராதபுரம் – ரம்பேவ முப்பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு; 50க்கும் மேற்பட்டோர் காயம்!

    November 10, 2026
    Editors Picks

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.