Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

November 10, 2026

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

November 10, 2026

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

November 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!
Breaking

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

ThanaBy ThanaNovember 10, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

 

​மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய நகைக்கொள்ளை சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

​ சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

கடந்த 5ஆம் திகதி புதிய காத்தான்குடி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத கொள்ளையர்கள், அங்கிருந்த ஆடை மாத்தும் (Stand) ல் தொங்கவிடப்பட்டிருந்த பையொன்றிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றிருந்தனர். சுமார் 16 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

 

​இந்த விசாரணைகளின் அடிப்படையில், 17, 56 மற்றும் 17 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி, சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.கைதான சந்தேக நபர்களில் ஒருவர் குறித்த வீட்டு உரிமையாளரின் உறவினர் எனத்தெரிய வருகிறது.

 

​கொள்ளையிடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையொன்றில் சந்தேக நபர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

அதற்கமைய, குறித்த நகைக்கடையிலிருந்து 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

​மேலும், கைது செய்யப்பட்ட மூவரில் இருவரிடமிருந்து 6 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொரு சந்தேக நபர், தனக்கு பங்கீட்டுத் தொகையாகக் கிடைத்த பணத்தை முழுமையாகச் செலவு செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

​காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம். நந்தனவின் வழிகாட்டலில், பொலிஸ் நிலைய பதில் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த கைது நடவடிக்கைகளையும், மீட்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.

 

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    அநுராதபுரம் – ரம்பேவ முப்பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு; 50க்கும் மேற்பட்டோர் காயம்!

    November 10, 2026
    Editors Picks

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.