அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறத் தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர இதனைத் தெரிவித்துள்ளார்.
தரவுகள் புதுப்பிக்கப்பட்ட பின்னர், தகுதியுடைய பயனாளர்களின் இரண்டாவது பெயர்ப்பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை தீவிர வறுமை மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் இந்நிவாரணத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் தமது மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
