மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு, இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தொல். திருமாவளவன், சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு, தமிழ் அரசியல் பரப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இறுதி அஞ்சலி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னாருக்கு தமது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
