Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

November 20, 2026

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

November 20, 2026

பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

November 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்
இலங்கை

ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

ThanaBy ThanaNovember 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

 

செ. திவாகரன்

ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம் – நகர அபிவிருத்திக்கு வர்த்தகர்கள் வரவேற்பு

 

ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் இன்று (20) இடித்து அகற்றப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி நடவடிக்கைக்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் வருமான நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால், பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த அனுமதியற்ற கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

 

தற்போதைய அரசாங்கத்தின் ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக, முறையற்ற வகையில் அமைந்துள்ள ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு நகரசபை நிர்வாகம் தீர்மானித்துள்ளதுடன், 19ஆம் திகதி முதல் அந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.

 

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கும் தேவையான வசதிகளுடன் தனியான இடமொன்றை அமைத்துக் கொடுக்க நகரசபை கவனம் செலுத்தியுள்ளது. இதன்மூலம், நுகர்வோர் இலகுவாக நடமாடக்கூடிய வகையில் சந்தை வளாகத்தை ஒழுங்கமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் தமது வியாபார நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொதுச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026

    இரத்தினபுரி-அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நினைவு நூலகம் திறப்பு!

    November 20, 2026

    தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!

    November 18, 2026
    Editors Picks

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026

    முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026

    இரத்தினபுரி-அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நினைவு நூலகம் திறப்பு!

    November 20, 2026

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026

    முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.