Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

November 26, 2026

வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

November 26, 2026

வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Breaking

போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ThanaBy ThanaNovember 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா

 

 

ஃபோர்டைஸ் தோட்ட வெள்ளப் பிரச்சினை: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு – பொலிஸாரிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு

 

 

நோர்வூட், பகலகஹா ஃபோர்டைஸ் தோட்டப் பகுதியில் பெய்யும் மழையினால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து, அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

 

குறித்த முறைப்பாட்டில், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள், பெருந்தோட்டத்துறை அதிகாரிகள், தோட்ட நிர்வாகம், நோர்வூட் பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

பகலகஹா ஃபோர்டைஸ் தோட்டத்தின் ஊடாகப் பாயும் ஆற்றை முறையாக அகலப்படுத்தி, வெள்ளநீர் வெளியேறுவதற்கான உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தாமையே இப்பிரச்சினைக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாகச் சாதாரண மழை பெய்தாலும் சுமார் 50 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுவதால் வீட்டுத் தளபாடங்கள், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி உபகரணங்கள் சேதமடைவதாகவும், மலசலகூடக் கழிவுகள் கலந்த வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுவதால் குறிப்பாகச் சிறுவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு மழைக்காலத்திலும் இவ்வாறான பாதிப்புகள் மீண்டும் ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அரசியல் பிரதிநிதிகள், அரச அலுவலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், நிரந்தரத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

ஆற்றை முறையாக அகலப்படுத்தி, வெள்ளநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், வெள்ளப் பாதிப்புகளை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கையொப்பங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டுடன் இணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026

    நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

    November 26, 2026
    Editors Picks

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026

    போர்டைஸ் பகுதியில் சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்-எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.