திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
திட்வா பேரிடர் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்தும் பதுளை மாவட்ட மலையக மக்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு இல்லை
அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலையிலான செயற்பாடுகளுக்கும் தன்னுடைய கவலையும் கண்டனத்தை தெரிவிக்கின்றார் பசறை பிரதேச சபையின் உறுப்பினரும்,தொழிலாளர் தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பிரதான இணை அமைப்பாளருமான பிரதீபன் பிரபு தெரிவிக்கின்றார்.
திட்வா பேரிடர் ஏற்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், பதுளை மாவட்டத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் இன்னமும் அந்தப் பேரிடரின் பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டெழ முடியாத துயரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
பேரிடர் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடமைப்பு, பாதுகாப்பான காணி, வாழ்வாதார மீட்சி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இதுவரையில் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
பேரிடர் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவதில் காணப்பட்ட வேகமும் ஆர்வமும், தற்போது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதில் ஏன் காணப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக, பதுளை மாவட்டத்தின் லுணுகலை, மடுல்சீமை, பசறை, சொரணாதொட்ட உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நிரந்தரத் தீர்வகளை எதிர்பார்த்துகாத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!
விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் அரசு கூடிய விரைவில் இத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
