இறக்குவானையிலுள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பாடசாலையில் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகறாரை குறித்த ஆசிரியர் விலக்க முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தகறாரில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் தனது தந்தையை அழைத்து வந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், மாணவனும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, இன்று காலை குறித்த பாடசாலையில் ஆசிரியர்கள் வரவு ஆவணப் புத்தகத்தில் கையொப்பமிடாமல் ஆசிரியர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்தே தாக்குதல் நடத்திய தந்தை கைது செய்யப்பட்டதுடன், மாணவனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தாக்குதல் நடத்திய தந்தைக்கு எதிராக நடடவடிக்கை எடுப்பதுடன், குறித்த மாணவனை உடனடியாக பாடசாலையை விட்டு நீக்குமாறும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
