இராகலை உயர் பாடசாலையில் “ஏற்றிடுவோம் ஒரு தீபம்”
கல்விக்காக உதவி கோரும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2023/03/22ம் திகதி இராகலை உயர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது இராகலை பிரதேசத்தை சூழவுள்ள பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்கிவைக்கபட்டதோடு இராகலை உயர் பாடசாலையில் கல்வி கற்று கடந்த ஆண்டு கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A உயர் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்து உயர்தரத்திற்கான புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை கருதி ஆண்டுதோறும் நடாத்தப்படும் பழைய மாணவர் நட்புறவாடல் நிகழ்வுக்கு பதிலாக இம்முறை கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைதிட்டம் முன்னெடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்ச்சிதிட்டத்திற்கான அனுசரணையினை பழைய மாணவர்கள், இராகலை நகர வர்த்தகர்கள், மற்றும் நலன் விரும்பிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

