நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் உதயமாகிறது.
நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின்
பழையமாணவ சங்கத்தின்
அங்குரார்ப்பனம் கூட்டமும் , சங்க உருவாக்கமும் அதிபரின் ஆலோசனைக்கமைய
நாடு தழுவிய ரீதியில் பழையமாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு 19.03.2023 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதன்போது பின்வரும் ஒழுங்கில் பதவி நிலை உறுப்பினர்களும் ,செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்:- அதிபர் திரு V. தினகரன்
உப தலைவர் :-திரு ஜெகநாதன்
செயலாளர் :-திருமதி சுதாஜினி
உப செயலாளர் :-திரு சதீஷ்
பொருளாளர் :-திரு லோரன்ஸ்
இவர்களுடன் இணைந்து செயல்பட
இன்னும் 12 உறுப்பினர்கள்
திரு ரேணுகுமார்
திரு லோகேஸ்வரன்
திரு ஜெய்சங்கர்
திரு பெஞ்சமின்
திரு ரகுவரன்
திரு ஜெட்ரூட்
திரு ரொஹான்
திரு மனோராஜ்
நித்தியவாணி
திரு சதிஸ்குமார்
நதியா
யோகமலர் (ஆலோசகர் )
இக்குழுவின் ஊடாக 1எதிர்காலத்தில் பழையமாணவர்களை ஒன்றிணைத்தல்.. 2பாடசாலையில் உள்ள சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.. 3பாடசாலையில் கல்வி கற்கும் வரிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது மேலும் பாடசாலையின் அபிவிருத்திக்கு தங்களின் பங்களிப்பு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டமை சிறப்பான விடயமாகும்..
அத்தோடு பாடசாலையின் பழைய மாணவ மாணவிகள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு சங்கம் அழைப்பு விடுக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்
0766622050
