நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் தேயிலை செடிகளில் ஒரு வகை விஷ பூச்சி.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.28.03.2023.
புதிய வகையான விஷ பூச்சி மலையக பகுதிகளில் தேயிலை செடிகளில் காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான வாழமலை பிரிவில் இவ்வாறான விஷ பூச்சிகள் காணப்படுவதாக என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தார்.
நேற்று (27)காலை தோட்டத்தில் தேயிலை செடிகளை கவாத்து வெட்டி கொண்டு இருந்த வேளையில் தொழிலாளர் ஒருவரின் கை பகுதியில் ஏதோ பூச்சி கடிப்பது போன்றது தெரிந்த போதிலும் தனது பணியை செய்து முடித்த பின்னர் அவர் இல்லத்திற்கு வந்த வேலையில் கடும் அரிப்பு ஏற்பட்டு தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற போதும் பலன் இல்லை.
தொடர்ந்து மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் முழுவதும் தடிப்பு அரிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிகிச்சை பெற்று இன்று அவர் தனது இல்லம் திரும்புகிறார்.
பெருந்தோட்ட பகுதிகளில் தற்போது தேயிலை செடிகளில் புதிய வகை விஷ ஜந்துக்கள் இருக்கின்றன என அவர் கூறினார்.
